பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

மக்கள் வாழ்வின் மகிமை கெட்டு விட்டது என்றேன் நான்.

மடிமை கெடுவார்க்கண் நிற்கும் (கடிகை) என்ற பாடல் தான் எங்களுக்குப் பொருந்துகிறது என்று பாடினேன்.

கெட்டுப் போகின்றவர்களுக்கு, சோம்பலே கூட வருகின்ற கொல்லும் துணையாகிக் கொள் கிறது என்றேன்.

ஆமாம்! நானும் மக்களுக்கு சொல்லியிருக்கி றேன். என் பாட்டை கேளுங்கள் என்றார்.

மடியுளான் மாமுகடி என்ப மடியிலான் தாளுளா தாமரை யினாள். (617)

சோம்பலுடையவர் மூதேவியாவர். சோம் பலற்றவர் தாமரையில் வீற்றிருக்கும் சீதேவியா வர். முன்னவர் இருப்பதை எல்லாம் இழப்பர். பின்னவர், எல்லாவற்றிலும் கொழிப்பர் என்று சோம்பலுக்கு உவமை கூறினேன். அந்த சோம்பல், இன்று இக்கால மக்களை ஆட்டிப் படைக்கிறதே என்றார்.

நீங்கள் பார்க்கின்றீர்களே! தங்கள் அழகான உடலமைப்பை, அவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவே பயன்படுத்திக் கொள் கின்றார்கள். அந்த உடலை வளமாக வைத்துக்