பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 82 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வாழ்வு, காதல் வாழ்வு என்பதாக, போருக்குப் போய் போரிடும் வீர வாழ்க்கை, பெருமிதம் தோன்ற இல்லத்தில் நடக்கின்ற காதல் வாழ்க்கை. வீரமும் காதலும் தான் தமிழர் வாழ்க்கை என்பதை எம் காலத்து மக்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

போருக்குப் போக வழியில்லை. துணிவில்லை. வசதியும் இல்லை. ஆகவே, இவர்கள் வாயிலே வீரத்தையும், விதியிலே காதலையும் செய்து கொண்டு, தமிழர் நாகரிகத்தை தேய்ந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு தமிழர் வெளி நாட்டுக்கு விருந்தாளியாக போய் வந்தாலும். சென்று, வா; வென்று வாவெற்றியை மொண்டு வா’ என்றெல்லாம் வீர வசனம் பேசி அனுப்பி வைப்பார்கள்.

இப்பொழுது என்ன அவசரம் வந்தது இப்படிக் கூச்சலிட என்றார் வள்ளுவர்.

நிழல் யுத்தம் என்பது உங்களுக்குத் தெரியும். எதிரில் பகைவர் யாரும் இல்லாத போதும் தானே தனியாய் நின்று, போரிடுவது போல நடிப்பதை நிழல் யுத்தம் என்போம். எதிரே யாரும் எதிரிகள் இல்லை. என்றாலும் ஆரவாரத்துடன் அவர்கள் வீதியிலே நடந்து கொண்டு ஓலமிட்டுச் செல்வது தான் புதுத்தமிழ்ச் சாதியின் பேராண்மை என்றேன்.