பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எமனே எதிர்த்து வந்து முன்னால் நின்ற போதிலும், ஓடாமல், அஞ்சாமல் கூடி எதிர் நின்று போர் செய்யும் மன வலிமை உடையதே. படை என்று பாடினேன் பாருங்கள். அந்தப் பைந் தமிழ்ப் படையை இன்று, இங்கு பார்க்கிறேன். என்றார். பெருமித உணர்வு பொங்கி வழிந்தது.

போரில்லாத போதும், புற முதுகு காட்டாமல், முன்னேறி வருகின்ற பெரு வீர நிலையுள்ள மக்கள் தமிழர்கள் என்று பெருமையுடன் பேசிக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்தின் மத்தியில் ஏதோ குழப்பம். வரிசை குலைந்துபோனது.

ஒருவருக் கொருவர் தாக்கிக் கொண்டனர். உண்மையான கட்சித் தொண்டர் ஒருவருக்கும், கூலிக்கும் வாய்ச் சண்டை தொடங்கி, கைச்சண்டை யாகி, சினிமாவில் காட்டுகின்ற முகத்தில் குத்தும் குத்துச் சண்டையாகி விடவே, கூட்டம் கலைந்தது.

கற்கள் வீசப்பட்டன. போலீஸ் போலீஸ் என்ற கூக்குரல்...குதிரை மீது அமர்ந்த காவலர்கள் பலர் வேகமாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து, தடியடி நடத்தினர். தாக்கினர். விரட்டி அடித்தனர்.

சிறிது நேரத்திற்குள் அந்த இடத்தில் ஆள் அரவமே இல்லாமல் போயிற்று. போர் போர் என்று புறநானூறு வீரம் காட்டிக் கத்திய கூட்டத்தைக் காணோம்.