பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 85

என்ன வீரம் இந்த மக்களுக்கு! சாதாரண தடி அடியைக் கூட தாங்க முடியாத கூட்டம்.

இப்படிப் பஞ்சாய் பறந்து விட்டதே!

எலிக் கூட்டம் ஒன்று பாம்பின் சீறலைக் கேட்டு, பயந்தோடி மறைந்தது போல ஆகி விட்டதே! இவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் இல்லாமற் போயிற்றே என்று பரிதாபப்

பட்டார் வள்ளுவர்.

ஒலித்தக் கால் என்னா முவரி எலிப் பகை நாகம் உயிர்ப்பக் கெடும் (76.3)

எலிகள் கூட்டம் படைபோல திரண்டிருந் தாலும், எதிரே வருகின்ற நாகம் சீறியவுடனே, எல்லாம் கேட்டு ஒடிப் போகும். என்ற பாட்டை, உண்மையென்றும் நிரூபித்து விட்டார்களே!

இவர்களா என் தமிழ் மக்கள், வெட்கம்! என் றார் வள்ளுவர்.

இதற்குள்ளே நீங்கள் மனத்தெம்பை இழந்து விடக் கூடாது. இதுவும் ஒரு தொடக்கம் தானே! இன்னும் நாம் போக வேண்டிய இடத்திற்கே போக வில்லை என்றேன்.

ஆமாம்! நாம் விளையாட்டு நடைபெறும் களத்திற்குத் தானே போய்க் கொண்டிருக்கிறோம். அதற்குள் இடையில் இந்த போர்க் கூட்டம்.