பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 87

உடலாலும் குறைந்த 3> . u J[T LDIT&35, வலிமை யற்றவராக மக்கள் தெரிகின்றார்களே! அது ஏன் என்று கேட்டார்.

அவர்கள் தங்கள் உடலை நன்கு காத்துக் கொள்வதில்லை. தம்மைப்பற்றி வானுயர புகழ்ந்து பேசுவதில் வல்லவர்கள். மற்றவர்கள் திறம் பற்றி மறந்தும் புகழ்ந்திடாமல், இருப்பதில் சமர்த்தர்கள். தமிழினம் தலையாய இனமாக வரவேண்டும் என்பதிலே! விருப்பம் இல்லாதவர்கள்; தம் உயர் வுக்கு உழைப்பதைவிட, பிறர் தாழ்வுக்கு உரிய பணிகளை அலங்காரமாய் வெற்றிகரமாகச் செய் வதில் அறிவாளிகள்.

இதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. உலக அரங்கில் உயர்ந்தவற்குரிய உயர் பணிகளை நினைக்கவும் நேரம் இல்லை. உடல் வலிமையில் நலிவு உண்டாகிற போது, அவர்கள் கனவுகள் கற்பனைகள் எல்லாமே நாசமாகி விடுகிறதே! என்றேன் வருத்தத்துடன்.

ஆமாம், மனப்பிணி உண்டாகிறபோது, உடல் பிணியும் மிகுதியாகி விடுகிறது. பிணியால் வருந்துகிற எவனும், பெரிய அளவில் வளர்ந்து விட முடியாதுதான். உங்கள் விளக்கத்தால் ஒன்று புரி கிறது எனக்கு, தமிழர்கள் முன்னேற்றம் தடை பட்டு நிற்கக் காரணங்கள் பல உண்டு என்றாலும், அவர்களைப் பார்க்கும் பொழுது என் குறள்தான் நினைவுக்கு வருகிறது என்று என்னைப் பார்த்தார்: