பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

அப்படிப்பட்ட ஆழ்ந்த சிந்தனைகளை அளிக்கும் குறட் பாக்களைத் தொகுத்துக் கொண்டேன் அவை எப்படி விளையாட்டுத் துறைக்கு நெருங்கி வருகின்றன. பொருந்தி வருகின்றன என்று புரிந்து கொண்டேன்.

புரிந்து கொண்ட சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் என்று பெயரும் தந்தேன்.

ஏறத்தாழ மூன்று ஆண்டு காலமாக விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழில், தொடராக வந்திருக்கிறது. இந்தச் சிந்தனைகள்.

வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தத் தொடர், எழிலான நூலாக உருவம் பெற்றிருக் கிறது.

இந்நூல் உருவாக முயற்சிகளை மேற்கொண்ட திரு. ஆதாம் சாக்ரட்டிசுக்கும், அழகாக அச்சிட்டுத் தந்த கிரேஸ் பிரிண்டர்சுக்கும் என் அன்பார்ந்த நன்றி.

சிந்தனைகளைத் தூண்டும் வகையில், ஒரு புதிய படைப்பை தமிழக மக்களிடம் தந்துள்ளேன்.

புதிய முயற்சி தான். குறைகள் இருந்தால் எழுதுங்கள். மறுபதிப்பில் மாற்றிக் கொள்கிறேன்.

என்றும் எனது நூல்களை அன்போடு ஆதரித்து வருகிற தமிழ் கூறும் நல்லுலகப் பேரன்பர்கள் அனைவருக்கும், என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

18- 10.90 லில்லி பவனம் - சென்னை-17