பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கிடைக்கும். அப்படிப்பட்ட அற்புத வாழ்வைப் பெற, நிலையான அறிவு வேண்டும்.

நிலையான தெளிவான அறிவு என்பது ஒர் அழகான மலர் போன்றது. அந்த அறிவு மலரைப் போன்று மலர்ந்து விரிந்து போகாமலும், குவிந்து குறைந்து போகாமலும் இருந்து, ஒரு நிலையாய் நிற்கிறது. இதை மக்கள் புரிந்து கொண்டு உலக அறிவுடன் திகழ வேண்டும், மகிழ வேண்டும் என்று தான் பாடிய குறளைப் பாடிக் காட்டினார்.

உலகத் தழீஇயது ஒட்ப மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. (425)

அப்படி யென்றால், எங்காலத்து மக்கள், ஏற்ற முடன் வாழ, நீங்கள் கூற விரும்புகிற கருத்துதான் என்னே என்று வள்ளுவரை நோக்கிக் கேட்டேன்.

எளிது. மிக எளிது. இந்தக் குறளைக் கேளுங்கள்

என்றார்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். (538)

மக்கள் புகழ்ந்து ஏற்றுக் கொள்கின்ற, நிதியும் தருமமும் நிறைவாகச் சொல்கின்ற காரியங்களைப் புகழ்ந்து ஏற்று, அவற்றைத் தொடர்ந்து பொறுப் புடன் மறவாமல் செய்கின்ற மக்களே, எழுச்சி