பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 93.

யுடன் வாழ்கின்றார்கள். உயர்வான வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

அத்தகைய அறிவார்ந்த காரியங்களை மறந்து விட்டு வாழ்கிற மக்களுக்கு, ஏழு பிறப்பிலும் விடிவு இல்லை. அவர்கள் வறுமையிலும், வாட்டுகின்ற துயரிலும் தான் வாழ்வார்கள் என்றார் வள்ளுவர்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றேன் தான்.

அதை அறிகின்ற பட்டறிவு தான், உணர்த்த வேண்டும். இகழ்ச்சியாக!எண்ணி, நல்லன செய்யாத மக்கள், கெட்டு அழிந்துபோன சான்றுகளைப் பார்த்து மாற்றிக் கொள்ள வேண்டும். பிறர் அழிந்து போனதற்கான காரணங்களைப் புரிந்து கொண்டு, அவற்றைத்தேவிர்க்கும் பொழுதுதான், தடுக்கும் பொழுதுதான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியினால் தான் வலிமை ஏற்படுகிறது என்றார்.

அந்த வலிமை மனவலிமையாகவும், உடல் வலிமையாகவும் மாறிக் கொள்கிறது என்றேன். உண்மை என்றார்.

இகழ்ச்சியின் கொட்டாரை உள்ளுக தாக்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (539)

இன்னும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். என்றார் வள்ளுவர், அவரது முகத்திலே முடிவு'