பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. டாக்டா எஸ். நவராஜ் செல்லையா

செய்து கொண்ட ஒர் உண்மையின் தெளிவு. தெரிந்தது.

தமிழர்களின் தனித்திறமைகள் இவ்வாறு தாழ்வுற்றுப் போய், தவித்துக் கிட்க்கின்ற தன்மை களுக்கு, அவர்களிடம் தேய்ந்து போய்கிடக்கின்ற, ஒற்றுமையின்மை, நம்பிக்கை இன்மை, ஊக்க மின்மை, உயர்வான கொள்கையின்மை போன்ற காரணங்களே தலையாய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றைத் தவிர்த்து வெற்றி கொள்ள முனை வதும் வெற்றிபெறுவதும் எளிது. இந்த உண் மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். -

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். (540) (உள்ளியது - எண்ணியது) தான் எண்ணியதை எல்லாம் எளிதாகப் பெற முடியும். எண்ணியது இயைந்ததாக இருந்தால், சிறப்புடையதாக இருந்தால், எல்லா வற்றையும் பெற முடியும் என்கிற நம்பிக்கையை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உயர்ந்த நிலையை மனதில் வளர்த்துக் கொள்ளாத மக்கள், மற்றவர்களுக்கு அடிமை யாகத் தான் வாழ்வார்கள் என்று பேசியபடி அவர் தடந்தார். நானும் பின் தொடர்ந்தேன்.