பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் sw

ஓரிடத்திற்கு வந்த போது, அது நான்கு சாலை கள் சந்திக்கும் இடமாக இருந்தது. அங்கிருந்து பார்த்த போது, அலைகடல் தெரிந்தது. அதன் அழகைக் கண்டு, என்னை கண் அசைத்துக் காண் பித்தார். அவரைப் பார்த்தபடி நானும் நடந்த போது, திடீரென்று ஒரு அதட்டும் குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தேன். போலீஸ்காரர் ஒருவர் ஆங்காரமாக அழைக்கும் குரல் தான் அது. அவர் கையில் நில்’ என்ற வாசகம் அடங்கிய கைப்பிடி, எங்களை நோக்கித் தான் நீட்டப்பட்டிருந்தது.

எங்கள் தவறை உணர்ந்து கொண்டோம்: சாலையில் வரிசை வரிசையாகக் கார்கள் வந்து கொண்டேயிருந்தன. அதன் நீளமான காட்சி, ஒரு பெரிய ஊர்வலத்தைத் தான், மீண்டும் எங்களுக்கு நினைவு படுத்தியது. -

இந்தக் கார்கள் எங்கு போகின்றன, என்றார் வள்ளுவர். இந்த இரண்டு நாட்களுக்குள் அவருக்குத் தமிழகத்தின் இன்றையத் தமிழ், நன்கு விளங்கி விட்டது.

நாம் பேசுகிற தமிழுக்கு இணையாகப் பேச ஆரம்பித்ததன் விளைவு தான், ‘கார்கள்’ என்று

அவர் கூறிய சொல்.

சிரித்துக் கொண்டே அவருக்கு விளக்கினேன். இன்று கிரிக்கெட் என்ற விளையாட்டுப் போட்டி