பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வள்ளுவரும் குறளும்

திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் என்றாலும் என்னை அழைத்து இதைச் சொல்லும்படி செய்ததைவிட, ஒரு புலவரை யழைத்துச் சொல்லச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. மற்றும் என்னை ஏன் அழைத்துச் சொல்லச் சொன்னிர்களென்றால், திருக் குறள் புலவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, புகையிலை வியாபாரிகளுக்கும் சொந்தம் என்று காட்டுவதற்காக அழைத்திருக்கிறீர்கள் என்றே நான் கருதினேன். அது உண்மையானால், புலவர்களிடத்திலிருந்து திருக்குறளைக் கொள்முதல்செய்து பொதுமக்களிடம் விற்பதுதான் வியாபாரிகளின் கடமையாக இருக்கும்.

நான் அறிந்தமட்டில் சில ஆண்டுகள் ஆராய்ந்து கண்டுபிடித்த சில செய்திகளைக்கொண்டு எனது.கருத்தை உங்கள் முன்பு கொட்டிக் குவிக்கலாம் எண்ணம் என்று எ ன் ணு கி ேற ன். இங்கு பேச்சாளர் பலரைப் போடவில்லை. பலரைப்போட்டால் ஒருவரிடமும் ஒன்றாவது சரியாகக் கேட்க முடிவதில்லை. ஆகவே, ஒருவன்தான் பேச வேண்டும், அதுவும் நெடுந்நேரம் பேசவேண்டும்' என்று படிப்பகத்தின் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார் கள். அதன்படியே பேச ஒப்புகிறேன், பேச்சு முடிகிற நேரம் எதுவென்று எனக்குத் தெரியாது. யாராகிலும் ஒருவர் இருவர் அப்படி எழுந்திருந்து போகத் தலை காட்டுவதுதான் நான் பேச்சை நிறுத்தும் நேரம் என்று முன்னதாகவே இப்பொழுது உங்களிடம் சொல்லிக் கொள்ளுகிறேன்.

பேச்சின் தலைப்பு வள்ளுவரும் குறளும்' என்பது. பேச்சின் குறிக்கோள் நீங்கள் அனை

தலைப்பு வரும் திருக்குறளைப் படிக்க வேண்டு மென்பது பேசுவதின் கருத்து வள்ளுவர் உயர்ந்தவர், குறள் சிறந்தது' என்பது பேச்சினுடைய