பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lá வள்ளுவரும் குறளும்

அந்தத் தொண்டினை அவர்கள் செய்திராவிடில், பல தமிழ்ச் சுவடிகள் அழிந்தது போல இதுவும் அழிந்திருக்கக் கூடும். அவர்கள் வள்ளுவர் வரலாற்றை ஒப்பவில்லை அத்தனை கதைகள் இருந்தன. சரியான சான்றோடு கிடைத்திருந்தால் எந்த ஒரு வரலாற்றையாகிலும் அந்த நூலிலே அவர்கள் அச்சடித்திருப்பார்கள் இல்லை. வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் அத்தனையும் பொய் யென்று அது நமக்குக் கிடைத்த ஒரு சான்று. மற்றொரு சான்று என்னுடைய ஆராய்ச்சியிலே கிடைத்தது. அது என்னவென்றால், தமிழ்நாட்டிலே கடந்த 35 ஆண்டு களாகச் சேரிகள் தோறும் சென்று கொண்டிருக்கிறேன். ஒரு சேரியிலாவது ஒரு புலைக்குடி மகளுக்காவது ஆதி என்ற பெயர் இல்லை; அதுதான் போகட்டும்; பகவன் என்ற பெயரைப் பெற்றவராது இருக்க வேண்டாமா; எந்த அக்கிரகாரத்திலும் பகவன்:அய்யர், பகவன் சர்மா, பகவன் சாஸ்திரி, பகவன் ராவ், பகவன் அய்யங்கார் என்று ஒருவராவது இல்லை. ஆகவே உயர்குடிக் கூட்டத் திலும் புலைக்குடிக் கூட்டத்திலும் காண முடியாத பெயரைக் கொண்ட தாய்தந்தையர்களுக்கு அவர் பிறந் தார் என்று கதை கட்டியது ஒரு கற்பனை. இந்தக் கற் பனை எங்கிருந்து வந்தது?' ஆதி பகவன் முதற்றே யுலகு' என்ற முதற் குறளிலிருந்து அவர் தாய் தந்தை யர்க்கு வணக்கம் செலுத்தினார் எனக்கொண்டு அக்கற் பனையை அவர்கள் புகுத்தினார்கள். இக்கற்பனைக் கதை, அறிஞர்களாலே கொள்ளத்தக்க தல்ல தள்ளத் தக்கதே!

அடுத்து, திருவள்ளுவர் எப்படிப்பட்டவர் என்று நான் உங்களுக்கு காட்டலாம் சினிமாப்படம் போல, அவரை உங்கள் முன்னே நிறுத்த நான் இப்பொழுது ஆசைப்படுகிறேன்.வள்ளுவர் தமிழகத்தில் தமிழ்நாட்டின் சொந்தச் சொத்திலிருந்து ஓர் உயர்ந்த கருவூலத்தைத் தந்து மறைந்த உலகப் பேரறிஞர். அந்த அளவு