பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 25

அந்தக் காலத்திலிருந்து தமிழர்களுக்கு உள்ள பண்பு என்ன என்றால், அதை எண்ணும்போதே உங்கள் உள்ளம் விரிந்து பெருகத் தொடங்கிவிடும்.

என்ன? தமிழ்நாடு மிகவும் குறுகிய நாடு! வரவர தெற்கே குறைந்திருக்கிறது. வடநாடு அகன்ற நாடு. இந்தக் குறுகிய நாட்டில் அவன் உலகமும் தமிழரும் இருக்கிறான். இருந்தும் அவன் உல கத்தை எண்ணித்தான் நூல் செய் திருக்கிறான். எந்த நூலை எடுத்தாலும் உலகம். சைவ சமய நூல் எனப்படும் பெரிய புராணத்தைச் சேக்கிழார் சொல்லத் தொடங்கினார். முதல் பாட்டிலே, முதலடி யிலே முதற் சொல்லாக உலகத்தை வைத்தார்: 'உலகெலாம் உணர்ந்து தேற்கரியவன்' என்று இது ஒரு பண்பு. அடுத்து வைணவ நூல்களை எடுத்துப் பாருங்கள். கம்பராமாயணம் பாடியவர் கம்பர். பன்னி ராயிரம் பாட்டுகள், முதல் பாட்டிலே, முதல் அடியிலே, முதற்சொல்லாக, உலகம் யாவையும் தாமுள வாக்க லும்...' என்பதில் உலகத்தை முன்வைத்துச் சொல்லப் பட்டுள்ளது. இந்த இரண்டு புராண நூல்கள், இலக்கண நூல்களைப் பாருங்கள். நம்பியகப் பொருள் முதல் பாட்டிலே, முதல் அடியிலே மலர் தலை உலகத்து' என்று எடுத்த உடனே முதலடியிலே உலகம், இது இலக் கணம். இலக்கியத்தை எடுங்கள். சங்க நூல்களிலே பத்துப்பாட்டு, முதற்பாட்டு, திருமுருகாற்றுப்படை, முதற் பாட்டிலே, முதலடியிலே, முதற்சொல், உலகம் இ.வப்ப வலனேர்பு திரிதரு' என்று உலகத்தை முன்னே வைத்துக் கூறப்பட்டுள்ளது.

இனி, ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம் முதற்பாட்டிலே, முதல் அடியிலே, அங்கண் உலகளித்த