பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வள்ளுவரும் குறளும்

லான் திங்களைப் போற்றதும்' என்று உலகத்திற்கே உலகத்தை முன்னேவைத்துக்கூறினார் இலக்கியம் இளங்கோவடிகள் வள்ளுவரோடு பிறந் தவர் என்று கருதப்படுகிற ஒளவை, 'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண் டார் வருவரோ? தமிழ் நாட்டீர் என்று இல்லை, இந்திய நாட்டீர் என்று இல்லை, 'உலகத்தீர் மாநிலத் தீர்' என்றே கூறினார். கபிலர் தாம் செய்த அகவலுக்கு முதற் பாட்டிலே முதல் அடியிலே, 'உலகத்திரே உலகத் தீரே! மனிதர்க்கு வயது நூறல்ல தில்லை' எடுத்தவுடன்ே உலகம்; அதுவும் இருமுறை உலகம் இந்த முறையிலே வள்ளுவரும் அந்தப் பண்டை விடாமல் திருக்குறளிலே, முதற்பாடலிலே,முதல் அதிகாரத்திலே. முதற் குறளிலே, ஆதிபகவன் முதற்றே உலகு என்று உலகத்தை முன் வைத்துக் குறள் செய்யத் தொடங்கியிருக்கிறார். அந்த வழியிலே வந்ததினாலேதான், தன்னையும் அதிலே ஒரு கூட்டாளியாக்கிக் கவிஞன் சுப்பிரமணிய பாரதி. வள்ளு வன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று உலகத்தை வைத்து ஒன்றை அளித் தருளினார் போலும் இது தமிழ்ப் பண்பு தமிழருடைய பண்பு ஆகும். தமிழ்ப் புலவர்கள் குறுகிய நாட்டிலி ருந்தாலும், அவர்கள் செய்த இலக்கிய இலக்கண நூல் களெல்லாம் உலக மக்களை நோக்கிச் செய்தவை என்று அறிகிறோம். இதுவும் ஒரு சிறப்பு திருக்குறளுக்கு. பொது நோக்காகத் திருக்குறளைப் பற்றி அறிய இந்த அளவு போதும் என்று நினைக்கிறேன்.

இனி அடுத்தது, குறளின் உள்ளே சென்று சில கருத்துக்களை எடுத்துச் சொல்வதுதான் திருக்குறளின் உள்ளே சொல்வதற்கு எல்லோருக்கும் குறளின் மிக எளிது அது ஒரு இரும்புடக்கடலை எளிமை நடையுடையதல்ல. அது யாருக்கும். எளிதில் விளங்கும். என்னுடைய சிறு