பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. வள்ளுவரும் குறளும்

இப்படி ஒன்று; என்ன? அவருடைய உள்ளம் பாருங் கள்! இப்படிப் படைத்தலைவன் மக்களைத் துரக்கிவிட் டிருக்கிறான். மன்னன் குடிகளைத்துக்கிவிட்டிருக்கிறான் அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிக்காரர்களைத் துரக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால், மொழிப் புலவர்களில் வள்ளுவனைத்தவிர உலகத்தில் எவரும் இப்படி மக்கள் சமுதாயத்தைத் தூக்கி உயர்த்திவிடவில்லை. 'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்’’ என்று. அவருடைய உள்ள ப் பண்பாட்டைப் பாருங்கள் ஏனென்றால், அப்படியே ஆவார்களாம். எண்ணிய எண்ணியாங்கு எய்துட. எப் போது? எண்ணியர் திண்ணிய ராகப் பெறின். பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் இங்கே இருப்பீர்கள். நீங்கள் தேர்வில் பாசாகி விடுவோம் என்று மட்டும் நினைக்காதீர் கள்; 90 மார்க்காவது வாங்குவேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்; 36 மார்க்காவது வாங்கி விடுவீர்கள் என்கிறார். நீங்கள் இப்போது நடக்க வேண்டும். இரயிலுக்குப் போகவேண்டும். ஆனால், போகும்போது போத்தனூருக்குப் போகவேண்டும் என்று நடந்தால்ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலே வந்துவிடும் என்கிறார், வள்ளுவர். எண்ணத்தை எட்டிப் போடு; செயல்பக்கத் திலே இருக்கும் என்கிறார். பகையைப் பெரிதாக எண்ணு, அது சிறிதாக வரும்; வென்றிடுவாய் என்கிறார். ஊரான் வீட்டு மாமரமாயிருந்தாலும், டேய்! இந்தக் கல்லால் ஒரு மாங்காய் உதிர்க்கிறேன் பார்!, என்று அடிக்காதே. இந்தக் கல்லால் பத்து மாங்காய் விழும் என்று அடி: ஒன்றாகிலும் விழும்' என்கிறார். பெரியதை எண்ணு. வெற்றி சிறியதாகவாவது கிடைத்துவிடும் என்கிறார்; எப்படி அவரது உள்ளம்!

நான் சிறிபிள்ளையாகப் படித்துக்கொண்டிருந்த போது, சென்னைக்கு அமெரிக்காவிலிருந்து ஒருபத்திரிகை வந்தது. இரண்டு ரூபாய் விலை சிறப்பு' போட்டிருந்தான். அதைப் புரட்டிப் பார்த்தேன், 'உலகத்திலே இதுவரை