பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 49

பெயரைத்தான் பெறுவானாம். இவ்வளவும் குறளிலேயே இருக்கிறது. திரும்பி இப்பொழுது படியுங்கள். பொருள் விளங்கும். ஒன்று பெறுவான் என்பதை முன்னமே சொல்லி விட்டார் ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்' அவன் எய்திய பட்டம் அதுதான். ஒன்றை எய்தி நூறு இழக்கும் சூதர். ஒன்றுக்கு வந்துவிட்டது சூதர் என்று, இழக்கிற நூறை எப்படிச் சொல்லுகிறார். வாழ்க்கைக்கு வேண்டியது அத்தனையும் சூதாடிப் பயல் இழந்து விடுவான். இழந்து விட்டதனாலே அவனுக்கு நல்ல வாழ்க்கை ஏது? என்று கேட்கிறார் பாருங்கள். "ஒன்றேய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல், நன்றெய்தி வாழ்வதோர் ஆறு?’ ஒன்றைப் பெற்று நூறை இழக்கின்ற சூதாடிகளுக்கு நல்லவைகளை எய்தி வாழ்கின்ற வாழ்க்கை ஏது? என்றே நம்மைக் கேட்கிறார். எவ்வளவு பெரிய உயர்ந்த கருத்துப் பாருங்கள்!

எல்லோருக்கும் நீதி சொன்ன வள்ளுவர் கள் குடிக் கிறவனுக்கு மட்டும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கி றார். இப்போது கள் ஒழிந்துபோய் விட் 色y டது. நடை முறையில்ே பழக்கத்திலே? (சிரிப்பு) இப்போது கண்டுபிடித்திருக் கிறார்கள் குடி தீமை தரும்' என்று. வள்ளுவர் அந்தக் காலத்திலேயே கண்டுபிடித்து ஒழித்திருக்கிறார். இப் போது சேலத்திலே ஒரு கூட்டமே இத் தொழிலை நடத்து கிறது. முன்பு வரி கொடுத்துக் கள் விற்றுக்கொண்டிருந் தது ஒழிந்து இப்போ வரி கொடுக்காமல் கள் விற்கிற வேலை நடந்து கொண்டிருக்கிறது ஒசூரில் ஒரு கூட்டத் தார் 90 பேர் சேர்ந்திருக்கிறார்கள். என்னமோ அதிக மாகத் தண்டித்தால் மூன்று மாதம் தண்டிப்பார்களாம். 90 பேர் மனைவி மக்களோடு இந்தக் கம்பெனியிலே சேர்ந்திருக்கிறார்கள், விற்கிறவனைப் பிடித்துக்கொண்டு போய்ப் போலீசார் அடைத்து விடுகிறார்கள் மூன்று மாதம் தண்டனை கிடைக்கிறது. போய்விடுகிறான்.

ليس . له