பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

うひ வள்ளுவரும் குறளும்

அடுத்த நாள் இன்னொருவன் வந்து விடுகிறான். அந்த இடத்துக்கு வரிசைக் கிரமமாக இருக்கிறார்கள் அந்த 90 பேரும். இரண்டாவது ஒருவன் வருகிறான். அவனைப் பிடித்துகொள்ளுகிறார்கள். மூன்றாவது ஒருவன் 88வது ஆளும் போயிடுவான். 90 -வது ஆளையும் 90-ஆம் நாள் பிடித்து விடுவார்கள். 91-ம் நாளில் முதல் நாள் சிறைக்கு சென்றானே அவன் வந்திடுவான் காய்ச்சு கிறதுக்கு. அப்படி அந்தச் சக்கரம் சுற்றுகிறது (சிரிப்பு) கம்பெனி ஒழுங்காய் வேலை செய்கிறது. காய்ச்சுகிறது. விற்கிறது. பணம் வருகிறது. எந்தக் கம்பெனி ஐ.பி. கொடுத்தாலும் இந்தக் கம்பெனி கொடுக்காது. ஒழுங் காக நடக்கிறது. அந்தத் தொழில்கள் ஒழிந்து போய் விட்டது என்கிறார்கள். ஆனால் இருக்கிறது.

வள்ளுவர் அந்தக் காலத்திலேயே கள் குடிக்கிற வனுக்கு மாத்திரம் நான் புத்தி சொல்ல மாட்டேன் . என்றார். ஏன் ஐயா கொஞ்சம் குடிகாரன் சொல்லுங்களேன் என்றால், சொல்ல . மாட்டேன் என்று கூ று கி றா ர். காரணம் கேட்டால், 'எப்படிப்பட்டவனுக்கும் புத்தி சொல்லி அவனைத் திருத்திவிடலாம். குடிகாரனுக்கு மட்டும் புத்தி சொல்லி அவனைத் திருத்த முடியாது' என்று கூறுகிறார். அப்படிச் சொன்னால் நமக்குத் தெரியாதாம் அதற்கு ஒர் உவமையும் சொல்லுகிறார். குடிகாரனுக்குப் புத்தி சொல்லி அவனைத் திருத்துகிற வேலை பயனற்றது. தண்ணிரில் முழுகினவனைத் தீவட்டி பிடித்து தேடுகிறமாதிரி அந்த வேலை என்கிறார். குடி காரனுக்குப் புத்தி சொல்லித் திருத்துகிற வேலை தண்ணிரில் முழுகிப்போனவனை எங்கே அவன் உடல் இருக்கிறது? என்று தீவட்டி பிடித்துத் தேடுகிற மாதிரி யாம். விளக்கைப் பிடித்து அவனைத் தேடுவது வீண் முயற்சி என்று சொல்கிறார். இதிலே ஒரு கருத்து என்ன தெரிமா? விளக் கெண்ணெய் ஊற்றிப் பந்தம் சுற்றி