பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வள்ளுவர் இல்லம்

செய்வதால் அப்போது நன்மையுண்டாவதுபோல் தோன்றி னாலும், பின்னர் எல்லோராலும் அறியப்பட்டும்-இகழப் பட்டும் - தண்டிக்கப்பட்டும் கெட்டொழிவர். இதனை ஒவ்வொருவரும் உணரவேண்டும். நேர்மையற்ற செயலைப் பிறர் அறியாது போயினும் தம்மனமே தம்மைச் சுடுமன்றோ? அதற்கு என்ன ஆறுதல் செய்வது மனம் புழுங்கிப் பித்துப் பிடித்துவிடும் அல்லவா?

பலர் நேர்மை தவறி நடப்பதால் பெரும் பொருள் ஈட்டி இன்பம் துய்க்கின்றனர். சிலர் நேர்மை தவற மனம் ஒவ்வாமையால், போதிய பொருளிட்ட முடியாது வறுமையி லேயே முழ்கிவாடுகின்றனர். ஈண்டு உலகத்தாரால் பாராட்டப்பெறுவது நேர்மையற்றவனின் செல்வமா? அல்லது நேர்மையுற்றவனின் வறுமையா? பின்னதேயன்றோ?

நேர்மையற்ற செல்வன் ஆடம்பரமாக உலா வருவதைக் காணும் மக்கள், அவனை நோக்கி, ‘இதோ கள்ள வாணிகக்காரன் (பிளாக் மார்க்கெட்) வருகிறான்; பணமுட்டை வருகிறான்; கைந்நீட்டி (இலஞ்சம் வாங்கி) வருகிறான்; ஊர்த் தாலியை அறுத்தவன் வருகிறான்’ என்றெல்லாம் எருக்கமாலை (இகழ்மாலை) சூட்டித் தூற்றுவதைக் காண்கின்றோமல்லவா? அதே நேரத்தில், நேர்மையுற்ற ஏழை எளிய தோற்றத்தில் வருவதைக் காணும் மக்கள், அவனை நோக்கி, “ஐயோ, நல்ல மனிதர்! நல்ல காலம் இல்லை! ஒரு துரும்பையும் தொடமாட்டேன் என்கிறார். இவர் மட்டும் பணம் வாங்குவது பணம் சேர்ப்பது என்று ஆரம்பித்தால் ஒரே நொடியில் குபேரனாகி விடலாம்! அதுதான் இவரது