பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 99

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து.’

உண்ணக் கூடாதவற்றை அளவு மீறி யுண்டால் சில மணி நேரத்திற்குப் பின்மாவது அல்லது சில நாட்களுக்குப் பின்பாவது உடலுக்கு நோய் வரும். அளவு மீறித் திரைப் படம் பார்த்தாலும் அது போலவே பின்பு கண்ணுக்குக் கெடுதியுண்டாகும். சிற்றின்பம் முதலிய பிறவும் சிறிது இடைவெளிக்குப் பின்பே இடையூறு உண்டாக்கும். ஆனால் நாக்கையடக்காமல், பேசக் கூடாத பேச்சுக் களைப் பிறர் புண்படப் பேசினால், பேசியவர் பேசப்பட்ட வரால் உடனே திரும்பப் பேசப்படுவாரல்லவா? பின்னர் இருவரிடையும் கலகம் முண்டு பெருந்தீங்கை இழைக்கு மல்லவா? அதனாலேயே மற்றவற்றை அடக்குவதில் சிறிது தாமதித்தாலும் பேச்சை வளர்க்கவே கூடாது. மேலும், மற்றைய உறுப்புக்களை அடக்காவிட்டால் தனக்கு மட்டுமே கெடுதியுண்டாகும். ஆனால் நாக்கையடக்காமல் புண் படுத்தும் பேச்சுக்களைப் பேசினால் பிறர்க்கும் கெடுதி - அதனால் தனக்கும் கெடுதியுண்டாகுமல்லவா?

‘யாகாவா ராயினும் நா காக்க” என்று வள்ளுவர் கூறியிருப்பதில் உள்ள நுட்பம் இப்போது நன்கு விளங்குமே!

ஒருவன் நல்ல சொற்களாகவே பேசிக்கொண்டு வரும்போது, நடுவில் ஒரு சொல்லாவது கெட்ட பொருளைத் தந்து கேட்பவரைப் புண்படுத்துமேயானால், மற்றைய நல்ல சொற்களால் யாதொரு நன்மையும் இல்லாமல், அவையும் கெட்டனவாகக் கருதப்பட்டுவிடும். எடுத்துக்