பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வள்ளுவர் இல்லம்

குரியதாகும். எனவே, உடைமைகளினும் சிறந்தன உடலுறுப்புகள், உடலுறுப்புகளினும் சிறந்தது உயிர், உயிரினும் சிறந்தது ஒழுக்கம் என்றாயிற்று. ஆகா! இதனினும் ஒழுக்கத்தின் உயர்வைச் சிறப்பித்தவர் எவர்? சிறப்பிக்கத்தான் முடியுமா?

நிற்க, ஒழுக்கம் உயிரினும் சிறந்தது என்பது எவ்வாறு பொருந்தும் ஒழுக்கம் மட்டும் இருந்து உயிர் போய்விட்டால் மட்டும் உலகில் வாழ முடியுமா? என்ப வற்றையும் ஆராயவேண்டும். ஏசுநாதர் போன்றோர் எதற்காக உயிரைவிட்டனர். உலகில் ஒழுங்குமுறையை (ஒழுக்கமுறையை) நிலைநாட்டவல்லவா? தாம் மேற் கொண்ட செயல்களால் தம் உயிருக்கு ஊறு நேரிடலாம் என்பதை அவர்கள் முன் கூட்டியே உணராதவர்களா? உணர்ந்து வைத்தும், உயிரினும் ஒழுக்கத்தைப் பெரிதாக மதித்தே - ஒழுங்கை நிலைநாட்டவே உயிரை விட்டார்கள் அன்றோ! கயவன் ஒருவனிடம் சிக்கிக் கொண்ட கற்புடைய மங்கை அக்கயவனால் தான் கற்பழிக்கப்படக் கூடிய நிலை நெருங்கியபோது தற்கொலை செய்து கொள் கின்றாளே! அது ஏன்? உயிரினும் ஒழுக்கத்தைப் பெரிதாக மதித்தமையினாலன்றோ? இவர்களெல்லோரும் உயிரினும் ஒழுக்கத்தை மதித்து உயிர் விட்டதனால், புகழுடம்புடன், எல்லோராலும் பாராட்டப் பெற்று இன்றைக்கும் வாழ் கிறார்கள் - இனியும் என்றும் வாழ்வார்கள் அல்லவா? எனவே, ஒழுக்கமின்றி உயிர் வாழ்பவர்கள் பலராலும் தூற்றப்படுதலின் அவர்களே உயிர் வாழாதவர்கள்; ஒழுக்கத்திற்காக உயிர் விட்டவர்கள் பலராலும் போற்றப்