பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 115

அதுபோலவே, ஒழுக்கமில்லாதவனும் மக்களிடையே எத்தகைய உயர்வையும் அடைய முடியாது. அவனுக்குக் கிடைக்கக்கூடிய பரிசு பழியேயாகும்.

ஒழுக்கக் கேட்டால் உலகில் பல தீங்குகள் நேருவதை அறிந்திருப்பதால், அறிஞர்கள் நல்லொழுக்கத்தினின்றும் தவறவே மாட்டார்கள். இழுக்கத்தால் பல துன்பங்கள் நேரும் என்பதையும், அதனால் ஒழுக்கமுடையவராய் வாழ வேண்டும் என்பதையும் அறிந்து ஒழுகுபவரே அறிஞர்.

ஒழுக்கமுடையோரே உயர்வடைவர்; ஒழுக்க மில்லாதவர், பிற குற்றவாளிகள் அடைய முடியாத பழியையும் அடைவார்கள். அப்படியென்றால் ஒழுக்க மின்மை எவ்வளவு கொடிய குற்றம் என்பது பெறப்படு மன்றோ! மேலும், தாங்களே அடைய வேண்டாத பழியையும் அடைவார்கள். அஃதாவது, ஒரு குற்றத்தைப் பிறர் செய்தாலும், அதனை ஒழுக்கமில்லாத இவரே செய்திருக்கக் கூடுமென்று உலகத்தார் கருதி, ஒழுக்கமில்லாத இவரையே பழிப்பர்.

பயன் தரும் நல்ல பயிரை விளைத்துப் பயனுற்று வாழ விரும்புபவர்கள் முதலில் நல்ல விதையை விதைக் கின்றார்களல்லவா? அது போலவே, நன்மையை அடைய விரும்புபவர்கள் முதலில் நல்லொழுக்கம் உடையவர் களாகத் திகழ வேண்டும். தீயொழுக்கம் என்பதோ, துன்பம் என்னும் நச்சு மாமரத்தை - முள்ளிச் செடியை வளர்க்க இட்ட விதையேயாகும் - என்பதும் கருதத் தக்கது. எனவே, நன்றிக்கு நல்லொழுக்கம் வித்தானாற்