பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பிறன் இல் விழையாமை

மற்றொருவனுடைய மனைவியைக் காம உணர்ச்சி யால் பெண்டாள விரும்பலாகாது. ஒழுக்கமுடையவர் என்று சிறப்பிக்கப் பெறுபவர்க்கு இப்பண்பு மிகவும் இன்றி யமையாதது.

‘பிறன்பொருளாள் பொட்டொழுகும் பேதைமை ஞாலத்

தறம்பொருள் கண்டார்கண் இல்.” அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டு நீதி நெறி முறைகளை அறிந்தவர்கள் பிறன் மனைவியை விரும்ப மாட்டார்கள். எனவே, பிறன் மனைவியை விரும்புபவர்கள் நீதிநெறி முறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் என்று புலப்படும்.

அறம் பொருள் காணுதலாவது:-திருக்குறளிலுள்ள அறத்துப்பால், பொருட்பால்களையே எடுத்துக் கொள்வோம். இவ்விரண்டு பகுதிகளிலும் கூறப்பட்டுள்ள அறத்தைப் பற்றியும் பொருளியலைப் பற்றியும் நன்கு கற்றறிந்து அவற்றைக் கடைப்பிடித்தலாகும். இத்தகையவர், காமத்தை வளர்ப்பதும் பிறருக்குக் கேடு செய்வதும் அறமல்ல என்ப தையும், ஒருவன் பொருளை (மனைவியை) இன்னொருவன் சேர்வது களவுக் குற்றமாகலின் அரசியல் தண்டனைக்கு உரியவனாவான் என்னும் பொருளியலையும் உணர்ந்தவ ராகலின், பிறன் பொருளாகிய ஒரு பெண்ணைச்