பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பொறை யுடைமை

பிறர் வைதாலும் துன்பம் செய்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது பொறுத்துக் கொள்ளும் பொறுமை உடையவராயிருத்தல் இல்லறத்தார்க்குத் தலையாய பண்பாகும்.

‘அகழ்வாரைத் தாங்கு கிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.”

நாம் நன்றாக இருக்கின்ற சம நிலத்தைத் தோண்டிப்பாழ் செய்தாலும், அந்நிலம் நம்மேல் சினம் கொள்ளாமல், மேலும் நம்மைத் தாங்கியும், உணவு முதலிய பல உதவி களைச் செய்தும் காத்தல் போல, நம்மைப் பிறர் இகழ்ந்து பேசியபோதும், அவரைச் சினவாமல் பொறுப்பதோடு, மேலும் அவர்க்கு நம்மாலான உதவியையும் செய்ய வேண்டும். நம்மைத் தாங்கிப் பல உதவி செய்யும் நிலத்தை ஒப்புமை (உவமை) காட்டியதால், இகழ்ந்த வரைப் பொறுப்பதோடு அவர்க்கு உதவவும் வேண்டும் என்பது வருவித்து எழுதப்பட்டது. இங்ஙனம் இகழ்ந்த வரைப் பொறுக்காமல் நாமும் திரும்ப இகழ்வோமானால், அவர், மேலும் சினந்து இன்னும் அதிகமாக நம்மை இகழ்வார்.

இவ்வாறு நாம் இகழ, அவர் இகழ வம்பு முற்றும். அதனால் நமக்குத் துன்பம் உண்டாவது உறுதி. நாம்