பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வள்ளுவர் இல்லம்

திரும்ப இகழாமல் பொறுத்துக் கொள்வோமேயானால் அவர் குலைத்துப் பார்த்து விட்டு, பின் ஒய்ந்து போவார். பொறுத்ததோடு மேற்கொண்டு ஒர் உதவியும் செய்து விடுவோமேயானால், அவர் நம்மிடம் குழைந்து, மீண்டும் இகழவே மாட்டார். குலைக்கிற நாயோடு நாமும் திரும்பக் குலைக்காமல், அதற்கு ஒரு வெல்லக் கட்டியும் போட்டால் எப்படியிருக்கும்? அது போலத்தான் இஃதும்.

இகழ்ந்தவரைப் பொறுக்க வேண்டும் என்பதற்கு ஈண்டு வள்ளுவர் நிலத்தை ஒப்புமையாகக் காட்டியுள்ளாரே! நிலத்திற்கு ஏதேனும் உணர்ச்சி உண்டா? அது தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துத் தாங்குவதில் ஒன்றும் பொருள் இல்லையே! என்று சிலர் வினவலாம். ஈண்டு வள்ளுவர் குறளின் நுட்பத்தை உணரின் மிகவும் நயப்போம். அது வருமாறு:- நிலம் தன்னை யார் எது செய்தாலும் எப்படி உணர்ச்சியற்றுக் கிடக்கிறதோ, அது போலவே, தன்னை யார் இகழ்ந்தாலும் உணர்ச்சியற்றவ ராக - அதாவது, - இகழ்ந்ததாக உணராதவராக - அவ்விகழ்ச்சியைப் பொருட்படுத்தாதவராக இருக்க வேண்டும் எனப் பொறுமையின் எவரெஸ்ட் எல்லையை வள்ளுவர் இந்தக் குறளில் வற்புறுத்தியுள்ளார். உலகத்தின் உயர்ந்த தலை இமயமலையின் எவரெஸ்ட் உச்சி தானே! எனவே தான் பொறுப்பவர் தலையாயவர் என்னும் பொருளில் பொறுத்தல் தலை’ என்றார் வள்ளுவர்.

பிறர் செய்த தீமையைப் பொறுத்தால் மட்டும் போதாது; அதனை அப்போதே மறந்து விடவும் வேண்டும்.