பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வள்ளுவர் இல்லம்

கொண்டிருப்பதற்குக் காரணம், எவரையும் பொறுத்தல்தாங்குதல் அறச்செயல் என்று கருதி அவன்மேல் அருள் கொண்டிருப்பதே போலும் புறங்கூறுபவர், உலகினர் உரைக்கும் பழமொழிக்கேற்ப, சோற்றுக்குக் கேடும் பூமிக்குச் சுமையுமாய்க் கிடந்து செத்தும் - சாகாத வராய்த் திரிகின்றனர்-என்பது ஈண்டு வள்ளுவர் கருத்து.

“அறநோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை ‘ புறங்கூறும் இயல்புடையவன் பிறருடைய குற்றத்தை எடுத்துத்தானே தூற்றுவான்? அவன், யாரும் குற்றம் செய்வது இயற்கை; ஆதலின் அதை அம்பலப்படுத்த லாகாது; ஏனெனில் - நாமும் குற்றம் செய்கிறோம்; இப் புறங்கூறுதலே ஒரு குற்றமல்லவா? நம்மைப்பற்றிப் பிறர் தூற்றமாட்டார்களா?’ என்றெல்லாம் எண்ணியுணர்வானே யானால் பின்னர் எவரைப்பற்றியும் புறம் கூறமாட்டான். கூறான். எனவே, அவனுக்கோ-பிறர்க்கோ யாதொரு பழியும் துன்பமும் இல்லையாகும். இவ்வாறு ஒவ்வொரு வரும் தத்தம் குற்றங்களை யுணரத் தொடங்கிவிட்டால் பின்னர் குற்றம் செய்ய முற்படமாட்டாராதலின் யார்க்கும் யாதொரு தீங்கும் யாராலும் ஏற்படாதன்றோ! எனவே, புறங்கூறுபவன் முதலில் தன்னைத் திருத்திக் கொள்வானாக.

‘ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு."