பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பயணில சொல்லாமை

புறங்கூறுதல் போலவே எந்தப் பயனற்ற பேச்சுக் களையும் இல்வாழ்வார் பேசுதலும் கூடாது. பலரும் வெறுக்கப் பயனற்ற பேச்சுக்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்வர்.

‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப்படும்.’

பத்துப் பேரைக் கொள்ளையடித்து ஒருவன் வாழ்கிறான் என்று வைத்துக்கொள்வோம். பத்துப் பேர் கெட்டால் ஒருவன் பெருவாழ்வு வாழ்வான். அவ்வொருவன் கெட்டால் பத்துப்பேரும் சீராக வாழ்வர். இங்கே ஒருவனது பெருவாழ்வைவிட, பத்துப் பேரின் வாழ்வே இன்றியமை யாததன்றோ? எனவே, பொதுமக்களும் அரசாங்கத்தாரும் பெரும்பான்மையினரான பத்துப்பேரின் நன்மைக்காக, சிறுபான்மையினனான ஒருவனையே தண்டிப்பார்களன்றோ?

எனவே, உலகில் பெரும்பான்மைக்கே மதிப்பு உண்டு என்பதை இதனாலும் இன்னும் பிற அநுபவங்களாலும் நாம் உணர்கிறோம். ஆகவே, ஒருவன், சிலர் மகிழ்வார்கள் என்பதற்காகப் பலர் வெறுக்கும் படியான பேச்சுக்களைப் பேசக்கூடாது - என்பதை யறிவிக்கவே ‘பல்லார் முனிய” என்றார் செந்நாப்புலவர். சிலர் தம்முடன் இருக்கும் இரண்டு முன்று தீய நண்பர்கள்