பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 171

திற்கு அஞ்சாதவர்களிடத்தில், நயமற்ற (இனிமையற்ற) கடிய சொற்களைக் கூறி மிரட்டியும், கடிந்து இடித் துரைத்துமே திருத்தவேண்டி வரும்; அதுபோன்ற சமயத்தில் நயமற்ற பேச்சைப் பேசுவதால் பிறர் திருந்துகின்ற பயன் உண்டாகின்றது; அதனால் அந்நயமற்ற பேச்சைப் பேசினாலும் பேசலாம்; எவர்க்கும் என்றும் யாதொரு பயனும் தராத பேச்சை மட்டும் பேசவே கூடாது என்று வள்ளுவர் கூறியிருப்பதில் உள்ள உண்மையை ஊன்றி யுணர்க! “என்றைக்குமே போடாத மகராசிதான் போட வில்லை; தினந்தோறும் போடும் தேவடியாளுக்கு என்ன கேடு?’ என்றானாம் ஒரு பரம்பரைப் பிச்சைக்காரன். அது போல, என்றைக்குமே நயனில்லாதவற்றைப் பேசும் கயவர்கள், பயனில்லாதவற்றைப் பேசுவதில் வியப்பொன்று மில்லை. ஆனால் என்றைக்குமே நயனுள்ளவற்றைப் பேசும் சான்றோராயினும், அதில் தவறினாலும், பயனில்லாத வற்றைப் பேசாமல் இருக்கக்கூடாதா? - என்பதைக் குறிக்கவே, வள்ளுவர் இக்குறளில் சான்றோரை இழுத்துச் சுட்டிப் பேசியுள்ளார். நயனில சொல்லினும்” என்ற உம்மையால், சான்றோர் சொல்லமாட்டார் என்றறிக!

அரிய பயனையடைய அதற்குரிய வழியை ஆராய் பவர், பெரிய பயன் தராத சொற்களைச் சொல்ல மாட்டார்.

“அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்

பெரும்பய னில்லாத சொல் ‘

‘பிறரை இழிக்கின்ற - புண்படுத்துகின்ற பயனற்ற

பேச்சைத்தானே பேசக்கூடாது? எவரையும் புண்படுத்தாத