பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வள்ளுவர் இல்லம்

இறக்கும்வரை எல்லாம் உள்ளவராக இன்பத்தில் இறுமாந் திருந்தாலும், தீய வழிகளில் வந்த அவர்களின் செல்வத்தைப் பொதுமக்கள் உண்மையாக மனமார மதிப்ப தில்லை யாதலின், அவர்கள் இல்லாதவரையே நிகர்ப்பர் நீதியின்முன்!

தனக்குத் துன்பம் வரக்கூடாது என்றெண்ணுபவன், பிறர்க்கும் துன்பந்தரும் செயல்களைச் செய்யக்கூடாது; தவறிச் செய்தால் தனக்கும் துன்பம் வரும்.

“அறிவினு ளெல்லாங் தலையென்ப தீய

செறுவார்க்குஞ் செய்யா விடல்.” “மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ் சூழும் சூழ்ந்தவன் கேடு.’ “இலனென்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகு மற்றும் பெயர்த்து.’ ‘தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால

தன்னை யடல் வேண்டா தான்’

வேறெந்தப் பகையினின்றும் தப்பித்துக் கொள்ளலாம்; ஆனால் தீவினை என்னும் பகையினின்றுமட்டும் தப்பித்துக் கொள்ளமுடியாது. தீ, வெள்ளம், புயற்காற்று, நில நடுக்கம் (பூகம்பம்), போர், அனுப்படைகள், பாம்பு - புலி - சிங்கம் முதலிய கொடிய உயிர்கள் முதலிய பல்வகைப் பகைகளி னின்றும் அவ்வவற்றிற் கேற்ற வழி முறையை (உபாயம்) முன்னதாகக் கையாண்டு தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் தீவினை செய்துவிட்டால் அது செய்தவனை விடவே விடாது. அவன் எந்தவூர் சென்றாலும்- இவன் இன்ன வூரில் இன்னது செய்தவன் என்றும், அவன் எந்த நாடு