பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 179

சென்றாலும் - இவன் இந்த நாட்டில் இன்னது செய்தவன் என்றும், உலகினர் இழித்துப் பழித்து, இவன் தப்பித்துக் கொள்ள ஒடி வந்துவிட்டான் - இவனை நம்பக்கூடா தென்றுணர்ந்து விழிப்பெய்துவர். அவனால் தீங்கு செய்யப்பட்டவரும் செய்த நாட்டு அரசாங்கத்தாரும் அவன் செல்லுமிடங்களிலெல்லாம் அவனுக்குத் தொல்லை கொடுக்க முயல்வர். அவன் சில காலங் கடந்து சொந்த இடம் மீண்டாலும் அவனது எதிரி அவனை வாளாவிடமாட்டான். மேலும் அவனது தீவினையை எவரும் அறியாவிடினும் அவனது மனமே அவனை அடிக்கடி இடித்துக் கலங்கச் செய்வதும் செயலறச் செய்வதும் இறுதியில் வெறி பிடிக்கவும் செய்வதும் உலகில் உண்டல்லவா?

இவற்றையெல்லாம் கருதியே தீவினை பகையாக உருவகிக்கப்பட்டதோடு ஏனைய பகைகளினும் கொடியது என்றும் கூறப்பட்டது.

‘எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை

வியாது பின்சென் றடும்’. ஒருவரை அவரது நிழல் விட்டு நீங்காமல் அவருடைய காலடியைப் பின் தொடர்ந்து செல்வது போல, தீயவை செய்தவரைத் தீமை விட்டு நீங்காமல் அவர் செல்லுமிடமெல்லாம் சென்று கெடுக்கும். ஒருவருடைய நிழலில் அவருடைய கைகள், கால்கள் முகம் முதலிய எல்லா உறுப்புக்களும் ஏற்ற பெற்றி தெரியும். ஆயினும் அந்நிழலின் எந்தப் பகுதியும் காலைத் தவிர வேறு எந்த உறுப்பிலிருந்தாவது தொடர்வதாகச் சொல்ல முடியாது. மொத்தத்தில் அம் முழு நிழலும் காலடியிலிருந்தே தொடர்ந்து தரையிலோ சுவரிலோ விழுந்து தெரிகின்றது.