பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வள்ளுவர் இல்லம்

மேலும், காலையிலும் மாலையிலும் மிக நீளமாகத் தெரியும் நிழல், ஞாயிறு (சூரியன்) உச்சிக்கு நெருங்க நெருங்கத் தானும் தன்னையுடையவனுடைய காலடியை நெருங்கிக் கொண்டே சுருங்குகிறது. சரியான உச்சி வேளையில் நிழலே வெளியில் தெரியாமல் காலடியுள் ஒடுங்கி விடுகிறது. நிழல் இங்ஙனம் காலடியுள் உறைந்து காணப் படாது மறையினும், பின்னர் உச்சி வேளை கழியக் கழிய மீண்டும் வெளித்தோன்றி நீண்டு கொண்டே செல்கிறது. உடையவன் எந்நாடு சென்றாலும் அது அவனை விடுவதில்லை. அது போலவே, தீயவை செய்தவர் சில சமயங்களில் தீமை இன்றி வாழ்வது போலக் காணப் படினும் அத்தீமை உண்மையில் அவரை விட்டு நீங்காமல் மறைந்து கிடக்கின்றது. சமயம் வந்தபோது காலடியி லிருந்து வெளிப்பட்டு நீளும் நிழல்போல், இத்தீமையும் நேரம் வந்த போது வெளிப்பட்டு, அவர் எங்கே செல்லினும் விடாது சென்று கெடுக்கும்.

“தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயா தடியுறைங் தற்று.” ஒருவன் தான் நலமுடன் வாழவேண்டுமென்று தன்னலத்தை விரும்புவானேயானால், எவர்க்கும் எவ்வளவு சிறிய தீமையைத் தரும் செயலையும் செய்யலாகாது. சிலர் தன்னலங் கருதிப் பிறர்க்குத் தீங்கிழைக்கின்றார்களே, அது தன்னலங் கருதிய செயலாகாமல் தன்னலத்தைக் கெடுத்துக் கொள்ளும் செயலாகவே கருதப்படும். ஏனெனில், ஒருவன் பிறர்க்குத் தீங்கு செய்தால், அதனால் அவனுக்குக் கட்டாயம் கேடுவரும் என்பதனை