பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர் சண்முகனார் 5

சில இல்லங்களில் - இருபதாம் நூற்றாண்டு நாகரிகத்தில் முழ்கித் தோய்ந்து படிந்து ஊறிக் கிடக்கும் சில இல்லங்களில் - பொதுவாகப் பண்பாடற்ற இல்லங்களில், வள்ளுவர் கூறியுள்ள இல்ல மாண்புகளின் அடிச்சுவட்டை யாயினும் சிறிதாயினும் காண முடிகிறதா? சில இல்லங்களில் பின்பற்றப்படும் நிலை மிகவும் இரங்கத்தக்கதாக-வருந்தத் தக்கதாக உள்ளது. இல்வாழ்வான் மற்றவரைக் காவா விடினும் பெற்றவரைக் காத்தாலே போதும் என்ற நிலை சில குடும்பங்களில் உள்ளது.

சிலர் திருமணம் ஆனதும் மனைவியின் மனநிறை வுக்காகத் தாய் தந்தையரைத் தவிக்கவிட்டுத் தனிக் குடித்தனம் போய்விடுகின்றனர். மருமகளுக்கு மாமனாரும் மாமியாரும் அயலாராகத் தெரிகின்றனர். வீட்டில் அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையாம். எல்லாம் இவளுடையதாம் - இவள் கணவருடையதாம்! தான் வந்த பிறகும், அந்தக் கிழங்கள் இன்னும் சாகாததற்கு நோகிறாள் மருகி. என்ன உலகம்! இந்நிலைக்கு ஆண்மகன் இடந் தரலாமா? இத்தகு இழிநிலை உலகில் ஒரு குடும்பத்தில் இருந்தாலே போதும் - இதனால், மனித இனம் முழுவதின் குடும்ப வாழ்க்கையும் தோல்வியடைந்ததாகவே பொரு ளன்றோ! பெற்றோரையே பேணாதார் உலகிற்கு என்ன செய்யக் கூடும்? இல்லறத்தார்கள் இதனை உணர்ந்து பார்க்க வேண்டும்.