பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 189

இவை ஒரு நாள் பயன் கொடுத்ததோடு நில்லாமல், நம் வாழ்நாள் முழுவதும் பயன் தந்து வருகின்றனவன்றோ? இவற்றில் இருப்பவற்றை நாம் பயன்படுத்திக் கொண்டு இல்லையாக்கினாலும், மேலும் நீர் ஊறியும் - பெற்றும் தளிர்-இலை-யூ-கனி முதலியவற்றைப் புதிதாக வெளிப் படுத்தியும் உதவுகின்றனவன்றோ மரம் பலகாலும் பயன் தந்து பின் பட்டுப்போய் விறகானாலும், அல்லது உயிரிருக்கும்போதே மனிதரால் வெட்டப்பட்டு விறகானாலும் அதன் விதைகளின் மூலம் மேலும் பல மரங்களை உலகிற்கு உதவியிருப்பதும் உண்மையன்றோ? இப்பொருத் தங்களையெல்லாம் ஒப்பிட்டு நோக்கி ஒப்புரவின் உயர்வை இல்லறத்தார் உய்த்துணரவேண்டும்.

ஒப்புரவாளர், ஒப்புரவு செய்தற்குத் தம் பொருள் நிலை இடம் கொடுக்காத போதும் ஒப்புரவு செய்தற்குப் பின் வாங்கமாட்டார் - அஃதாவது - அரும்பாடுபட்டாவது ஒப்புரவு செய்ய முயலுவார். வயலில் விதைத்த நெல்லை வாரிக்கொண்டு வந்து சோறு ஆக்கிப்படைத்த இளையான் குடி மாறரின் வரலாறு மக்கள் அறிந்ததே!

ஒப்புரவாளன் ஏழையாய் விட்டான் என்றால், செய்ய வேண்டிய ஒப்புரவைச் செய்ய முடியாமலும், அதனால் மனம் அமைதி பெறாமலும் வருந்துகின்றான் என்பதுதான் பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு ஏழையாயிருப் பினும், அரும்பாடுபட்டு உழைத்து முயன்று ஒப்புரவு செய்து வாழ்வானேயாயின், அவன் ஏழையாகக் கருதப்பட மாட்டான்; சோம்பலுற்று ஒப்புரவு செய்யாதபோதே ஏழை யாகக் கருதப்படுவான். எனவே ஏழையாயினும் ஒப்புரவு