பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 வள்ளுவர் இல்லம்

செய்பவன் பணக்காரன் என்பதும், பணக்காரனாயினும் ஒப்புரவு செய்யாதவன் ஏழை என்பதும் தெளிவு.

ஒப்புரவு செய்வதால் கேடுவரினும், அவ்வொப்புரவை, ஒருவன் தன்னைப் பிறர்க்கு அடிமையாக விற்றாயினும் கொள்ளலாம். அஃதாவது - ஒருவன் தன்னிடமுள்ள செல்வமெல்லாவற்றையும் பிறர்க்கு உதவி வறுமையடைந் தாலும், மேலும் தன்னைப் பிறர்க்கு அடிமையாக விற்று உழைத்தாயினும் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்.

தன்னை விற்பது என்றென்ன? தன் தலையையே கொடுக்கத் துணிந்த குமணனது வரலாறு தமிழ் மக்கள் அறியாததல்லவே!

“இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்’ “நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயுரே

செய்யா தமைகலா வாறு’. “ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து’.