பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 195

போல இவனும் நன்றாக இருக்கக்கூடாதா? ஐயோ இவன் வாழ்வு என்னாவது நாம் ஏன் இவனை இந்தக்கோலத்தில் பார்த்தோம்! இவனுக்கு என்ன கொடுத்தால் - எவ்வளவு கொடுத்தால் இவன் முகம் மலருமோ? என்றெல்லாம் எண்ணி நம் மனம் துன்புறுகிறது. ஆம், உண்மையான மனித உள்ளம் துன்புறத்தான் செய்யும்! இவ்விதமாக, கேட்பவர் துன்புறுவதைப் போலவே, கேட்கப்படுபவரும் துன்புறுகிறார். வந்து கேட்பவருக்கு அவர் விரும்பியதைக் கொடுத்து அவரது (திருப்தியான) மகிழ்ச்சியான முகத்தைக் காணும்வரைக்கும் கேட்கப்பட்டவருக்கும் மனநிறைவு இருக்க முடியாது. ஒன்றும் கொடுக்க வாய்ப்பில்லாது போய்விட்டாலோ, கேட்டவரினும் கேட்கப்பட்டவரின் மனநிலை மிகவும் இரங்கத்தக்க தன்றோ?

‘இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணு மளவு ‘

உயிர்கட்குத் தீராத கொடிய பிணியாவது பசிப் பிணியேயாகும். மற்ற பிணிகளோ இடையிலே தோன்றிச் சின்னாள் இருந்து இடையிலேயே மறையக் கூடியன. ஆனால் பசிப்பிணியோ பிறக்கும் போதே உடன் தோன்றி இறக்கும் வரை உடன் இருக்கக் கூடியது. மற்ற பிணிகட்கு மருந்துண்டு. இதற்கோ எத்தனை நாளைக்கு எத்துணை உணவு போட்டாலும் போதாது - மேன்மேலும் கேட்டுக் கொண்டேயிருக்கும். போடா விட்டாலோ உயிரையே அரித்துத் தின்னும். ஒரு வேளை குறைந்தாலும். என் - ஒரு வேளையிலேயே ஒரு சிறிது குறைந்தாலும் சிரிப்பாய் சிரிக்க வைத்து விடும். இத்தகு பொல்லாப்