பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வள்ளுவர் இல்லம்

தாரமும் பின்னிப் பிணைத்துப் பேசப்பட்டுள்ள பேரழகை என்னென்று வியப்பது!

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.’ “பாத்துண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.’

உலகில் எத்தனையோ வகை இன்பங்கள் உள்ளன. வள்ளுவரோ இங்கே இல்லறத்தார்க்கு ஒரு புதிய இன்பத்தை அறிமுகப்படுத்துகிறார். சிலர் தம் செல்வத்தைத் தங்கட்கு மட்டும் பயன்படுத்தி இன்புறுகின்றனர். இவ் வின்பத்தினும், தம் செல்வத்தைப் பிறர்க்கும் பயன்படுத்தி, அதனால் அவர் பெறும் இன்பத்தைக் கண்டு தாம் மகிழும் இன்பமே பேரின்பமாகும். இந்த ஈத்து உவக்கும் இன்பத்தை அறியாதவர்கள் செல்வத்தை வீணே வைத்திருந்து இழந்துபோகின்றனர். இத்தகு இன்பத்தை இல்லறத்தார்கள் இழக்கலாகாது.

‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.’ பிறர்க்குக் கொடுத்து மகிழும் இன்பத்தைப் பெறாதவர்கள் தம்செல்வத்தை இழந்தவராவார்கள் என்று ஈண்டு ஆசிரியர் கூறியுள்ளார். இஃது எங்ஙனம் பொருந்தும்! இவர்களுக்குப்பின்னால் இருக்கும் செல்வத்தை இவர்களுடைய பிள்ளைகளும் பேரப் பிள்ளை களும் துய்க்கமாட்டார்களா? இழந்துவிட்டதாக எப்படிச் சொல்லமுடியும்? அப்படியில்லை. பிள்ளைகளும் பேரப்