பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வள்ளுவர் இல்லம்

கேட்டு விடுவார்களோ என்று அஞ்சித் தான்மட்டும் தனித்திருந்து உண்ணுபவன் ஒருவன் இருக்கிறான் - இவ் விருவருள் எவன் உயர்ந்தவன், எவன் தாழ்ந்தவன் என்று கூர்ந்து நோக்கின் உண்மை புலனாகுமே!

“இரத்தலின் இன்னாது மன்ற கிரப்பிய

தாமே தமியர் உணல்.” இந்த ஈகை’ என்னும் பகுதியில் வள்ளுவர் இவ்வளவு புரட்சி பண்ணியிருப்பார் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு குறளிலும் புரட்சி! குறளுக்குக் குறள் புரட்சி முனைந்து நிற்கிறது. இறுதிக் குறளிலோ புரட்சி உச்சி எல்லையாம் கடைசிக் கட்டத்தை அடைந்து விட்டது. ஆம்! சாவைப் போல் துன்பம் தரத்தக்கது-வேதனை விளைக்கக் கூடியது வேறு ஒன்றும் இருக்கமுடியாது; ஆனால் அந்தச் சாவையே இனிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், பிறர்க்கு ஒன்று கொடுக்க முடியாத போது என்று கொக்கரிக்கின்றார் வள்ளுவர். நிரம்ப வைத்துக்கொண்டே இல்லை என்று கைவிரிக்கும் வன்னெஞ்சினரின் மண்டை யிலடிக்கும் சம்மட்டியல்லவா இந்தக் கருத்து! உயிர் போன பிணத்திடம் ஒன்றும் இல்லை - அது ஒன்றும் கொடுக்க முடியாது; அதுபோலத்தானே இவர்களும்! எனவே, பிறர்க்குப் பயன்படாதவர் இருப்பதும் இறப்பதும் ஒன்றே! “சாதலின் இன்னாத தில்லை இனிதது உம்

ஈதல் இயையாக் கடை."