பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. புகழ்

இல்லறத்தார் புகழுடன் வாழவேண்டும். பொது வாகப் புகழை விரும்பாதவர் உலகில் பெரும் பாலும் இருக்க முடியாது. புகழைப் போல் தெவிட்டாத பொருள் வேறில்லை என்று கூடச் சொல்லி விடலாம். அம்மம்மா! சிறு குழந்தைகளுக்கு மட்டும் புகழ் தெவிட்டுகின்றதா என்ன! தம் தம்பி தமையனைவிட, தங்கை தமக்கையை விட, எதையும் தானே முதலில் பெற்றதாக இருக்க வேண்டும் - எல்லோரும் தன்னைப் பாராட்டி மதிக்க - வேண்டும்-என்பன போன்ற புகழ் நோக்கில் குழந்தைகளுக்கு எத்துணைக் கொள்ளை விருப்பம்! இத்தகு புகழ் வேட்டை, வயதாக, வயதாக தெருவில் விளையாடும் போதும் சரி - பள்ளிக்கூட வாழ்க்கையிலும் சரி - உலக அரங்கிலும் சரிநீடித்துப் பலவகை உருவங் கொள்கிறது.

உலகில் ஒரு சிலர் தங்களை யாராவது புகழ மாட்டார்களா என்று ஏங்கித் தவங் கிடக்கின்றனர்; புகழ்பவரைத் தேடி அலைகின்றனர்; புகழ்மாலை சூட்டுப வருக்கு வேண்டிய வசதிகள் செய்து தருகின்றனர். எப்படியும் தங்களை யாரும் புகழவில்லை. என்றால், தாங்களாகவே தங்களை மணிக்கணக்கில் புகழ்ந்து கொள்கின்றனர்; அப்புகழைப் பொறுமையுடன் கேட்பதற்கு ஆட்களைத் தேடியலைகின்றனர்; அவர்கட்கு வேண்டிய வசதியும் செய்கின்றனர். எத்துணைப் புகழ்ப்பித்து!