பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வள்ளுவர் இல்லம்

வண்பயன் குன்றும் என்றார் ஆசிரியர். எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்று ஒளவையாரும் புறநானூற்றில் புகன்றுள்ளாரே.

உலகில் எண்ணற்ற உயிரினங்கள் தோன்றி மறை வதைப் போலவே மக்களும் தோன்றி மறைகின்றனர். என்ன பயன்! சிலர் ஆடுமாடுகளைப் போல-ஏன், அவற்றினுங் கேடாக வாழ்க்கை நடத்துகின்றனர்; அந்தோ அளியர்! நேற்றுச் செய்ததையே இன்றும் செய்கின்றனர் - இன்று செய்வதே நாளையும்! அதாவது, நாடோறுந்தான் உழைக் கின்றனர், உண்ணுகின்றனர், உறங்குகின்றனர் - சிலர் உழைப்பதுகூடக் கிடையாது. என்ன வாழ்க்கை புதிய புதிய குறிக்கோள்களும் திட்டங்களும் நிறைவேற்றங்களும் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? புதிய புதிய அருஞ் செயல்கள் புரிந்து - பெரும் பணிகள் ஆற்றிப் புகழுடன் வாழ்வதே குறிக்கோள் வாழ்க்கையாகும். இங்ஙன மின்றி, செய்ததையே திரும்பத் திரும்பச் செய்துகொண் டிருக்கும் நாட்களை வாழ்நாளில் சேர்த்துக் கணக்கிட முடியாது. அதாவது, ஒருவன் ஒரு திங்களில் (மாதத்தில்) முதல் நாள் வீணே உண்டு உறங்கிக் காலங்கழித்தது போலவே மற்ற நாட்களிலும் இருப்பானேயானால், அவன் அத்திங்களில் ஒரு நாள் மட்டும் உயிர் வாழ்ந்ததாகவே பொருள். அது போலவே, ஓராண்டு முழுவதும் ஒருநாளில் செய்ததுபோல் மட்டும் செய்துகொண்டிருப்பானேயாயின், அவ்வாண்டில் ஒருநாள் மட்டும் உயிர் வாழ்ந்ததாகவே பெர்ருள். இப்படிப் பார்த்தால் அவன் வாழ்நாளின் அளவு என்ன? அவன் பல்லாண்டுகள் உயிர் வாழ்ந்தாலும்,