பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வள்ளுவர் இல்லம்

வர்க்கும் பெருமை! எல்லோரிடத்திலும் அன்பு உள்ளவன் தன் மனைவியிடத்திலா அன்பு இல்லாதவனாகப் போய் விடுவான் பரிமேலழகர் கூறியபடியே வைத்துக் கொண்டாலும், தம் மனைவியின் மேல் அளவு மீறி அன்பு கொண்ட சிலர் பிறரை நோகச் செய்கின்றனரே! பிறரை என்ன? பெற்றோரையே பேதுறச் (மயங்கச்)செய்கின்றனரே! இதுதானா இல்வாழ்க்கையின் இலக்கணம்?

மேலும் பரிமேலழகர், அன்பை இல்வாழ்க்கையின் இலக்கணமாகவும், அறத்தைப் பலனாகவும் பகர்ந்துள்ளார். இங்குக் கூர்ந்து நோக்க வேண்டும். பண்பும் பயனும் அது என்பது குறள். ‘அது’ என்னும் ஒருமை அன்பையும் அறத்தையும் உடைத்தாயிருக்கும் செயலைக் குறிக்கின்றது. எனவே, பண்பும் அச்செயல்தான், பலனும் அச்செயல்தான். பரிமேலழகர் உரைப்படி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துக் கூறும் நோக்கம் வள்ளுவர்க்கு இருந்திருக்குமே யானால் ‘பண்பும் பயனும் அவை’ என்று பாடியிருப்பார். அன்பு இலக்கணமாகும் போது, அறம் மட்டும் இலக்கணம் ஆகாதா? அறம் பயனாகும் போது, அன்பு மட்டும் பயனாகாதா? ஆகுமே! ஆய்க அறிஞர்.

உலகில் சிலரது குடும்ப வாழ்க்கை செம்மையுற நடத்தலைக் காண்கின்றோம். அந்தக் குடும்பத்தாரிடைக் குறையொன்றுங் கூறவியலாது. கணவன் மனைவி ஒற்றுமை, பெற்றோர் பிள்ளை ஒற்றுமை, விருந்தோம்பல், சுற்றம் தழுவல், பிறர்மனை நயவாமை,

யன இன்மை இன்ாத்திஇேரikம9ன்ேே