பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 11

வாழ்வர். ஆனால், பெரும்பான்மையோர்க்கு அறத்தாற்று இல்வாழ்க்கையில் இன்பமோ, பெருமையோ, விறுவிறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு மாறான புறத்தாற்று இல்வாழ்க்கையிலேயே பூரிப்புப் பொங்குகிறது; இன்பங் கொழுந்து விடுகிறது; விறுவிறுப்பு முறுக்கேறுகிறது. ஆனால் புறத்தாற்று இல்வாழ்க்கை முதலில் முன்னேற்ற மாய்த் தென்படினும் பின்னர்க் கவிழ்த்து விடும்; ஆதலின் அறத்தாறே என்றும் நின்று நிலைத்து நீடிக்கும்.

‘அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவதெவன்’ இந்தக் குறளில் அறத்தாறு, புறத்தாறு என இரண்டு நெறிகள் பேசப்பட்டுள்ளன. அறநெறிக்குப் புறநெறி (எதிர்மாறான நெறி) மறநெறி (தீயவழிகள்) என இயற்கையாய்ச் சொல்லமைப்பு-தொடர் அமைப்புக்களை ஒட்டி உரை எழுதப்பட்டது. ஆனால், பழைய உரையாசிரியர்கள், இங்கே பெரும் புரட்சிப் பொருள் புகன்றுள்ளனர். அவர் தம் துணிவைப் பாராட்ட வேண்டும். புறத்தாறு என்பதற்கு, இல்லற வாழ்க்கைக்குப் புறம்பான துறவற வாழ்க்கை- தவவாழ்க்கை என அவர்கள் பொருள் எழுதியுள்ளனர். நல்லமுறையில் இல்வாழ்க்கை நடத்தி னால், துறவறத்திற்குச் சென்றுதான் தீரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; துறவறத்திற்குச் சென்று பெறக்கூடிய நன்மைகளையெல்லாம் இவ்வில்லறத்திலேயே பெறலாம் என்பது அவர் தம் கருத்து. உண்மைதானே!

உள்ளத்தில் ஒழுங்கு இல்லாமல், முற்றத் துறந்த முனிவரெனச் சொல்லிக் கொண்டு, காட்ல் திரிநீரின்