பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 17

நரைத்த தலைகளையே நாடுவர் மக்கள். அவர்களுக்குத் தான் மனித வாழ்வின் முழுப் பூட்டுத் திறப்பும் தெரியும். அவர்களே - அவர் தம் அறிவுரைகளே மற்றவர்க்கு வழி காட்டி. எனவே தான், இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன், அங்ஙனம் வாழாது வேறு வழியில் வாழ முயலுகின்ற மற்றவர்க்கெல்லாம் தலைமை தாங்குகிறான். இப்பொழுது புரிந்திருக்குமே இக்குறளின் உட்கிடை. தவம் என்றால் ஏதோ தனிப்பட்டது-அப்பாற்பட்டது என்று எவரும் தயங்க வேண்டா. ஒழுங்கான முறையில் இல்லறம் நடத்துவதும் ஒர் உயர்ந்த தவமே. மேலும் இந்த இல்லறத் தவம், துறவிகளின் துறவுத்தவத்தைவிட வலியதும் சிறந்ததும் ஆகும். சமய நூலார் இல்லறத் துறவு என்று சொல்வது இந்த இல்லறத் தவத்தைத்தான் என்றும் கூறலாம். இல்லறத் துறவு என்றால் வேறு எதுவும் இல்லை; பொழுது விடிந்து பொழுது போகும்வரையும் தம் மனைவி மக்களை மட்டுமே கட்டியழுதுகொண்டு-அவர்கட்கு வேண்டியவற்றை மட்டுமே தேடி உழன்றுகொண்டு கிடக்காமல், மற்ற மன்பதைக்கும் (சமுதாயத்துக்கும்) தொண்டாற்றுதலே இல்லறத் துறவு. இத்தகைய தொண்டு புரிவோரே இல்லறத் துறவிகள்.

‘தவஞ் செய்வார் தங்கருமம் செய்வார்’ என மற்றொரு குறளில் கூறியுள்ளபடி, தாம் மட்டுமே தனியே அமர்ந்து முக்கு விழிகளை முடிக்கொண்டு செய்யும் துறவுத்தவத்தைவிட, மனைவிமக்களுடன் மக்கள் சமுதாயத்துக்கும் தொண்டாற்றும் இல்லறத்தவம் எவ்வளவோ சிறந்ததுதானே! இது குறித்தே