பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 55

அரசகுமாரன் அரக்கன் அறியாது சென்றான். கன்னி காளையைத் துணை வேண்டினாள். இருவரும் காதலரா யினர். காதலனின் சூழ்ச்சிப்படி, காதலி அரக்கனை அடைந்தாள். ஆடினாள்; பாடினாள்; ஆசை காட்டினாள். மயங்கிய அரக்கனிடம், உன் உயிர் நிலை எங்கே உள்ளது” என்று பதமாகக் கேட்டாள். அதோ தெரி கின்றதே - அந்த ஆலமரத்தின் அடியில் ஐந்து வண்டுகள் உள்ளன. அவற்றில் தான் என் உயிர்நிலை உள்ளது’ என்றான் ஆசைக்கு அடிமைப்பட்ட அரக்கன். ஐந்து வண்டுகளும் நசுக்கப்பட்டன. அரக்கனும் பொசுக்கப் பட்டான். இத்தகைய கட்டுக் கதைகளைக் கேட்டிருப்போம். இதனை இங்கு எடுத்துக்காட்டியது நம்புவதற்காக அன்று! உயிர்நிலை என்பதை நினைவூட்டி விளக்குவதற்காக! இது போல மனிதனுடைய உயிர்நிலை அன்பில்தான் இருக்கிறது. அன்பு அழிக்கப்பட்டால் அவனும் அழிக்கப் படுவான். அன்பில்லாத மனிதனைத் தோலால் முடி வைத்திருக்கின்ற எலும்புக்கூடு என்று இயம்புவதில் என்ன தவறு? எலும்புக்கூட்டால் யாருக்கு என்ன நன்மை உலகில்?

‘அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம் தளிர்த் தற்று’ “புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப் பன்பி லவர்க்கு” ‘அன்பின் வழியது உயிர்கிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு” எனவே, பொதுவாக மக்கள் வாழ்க்கைக்கு - அதிலும் சிறப்பான இல்வாழ்க்கைக்கு அன்பு மிகவும் இன்றியமை யாத பொருள் என்பது இப்போது இனிது விளங்குமே!