பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 67

யிருப்பாரேயாயின், அச்சிறிய உதவியும் பின்பு செய்த வனுக்குப் பெரும் பயன் அளிக்கும் என்று நாலடியாரும் நவில்கின்றது.

நாம் நல்லவர்க்கு அணுவளவு உதவி செய்தாலும், அவர்கள் நன்றியறிதலாக நமக்கு மலையளவு உதவி செய்வார்கள். நாம் தீயோர்க்கு மலையளவு உதவி செய் தாலும் அவர்கள் அவற்றை மறந்து, பாலுண்ட பாம்பு நஞ்சையே கக்குவதுபோல, நமக்குத் தீங்கேயிழைப்பார்கள். ஆதலின் ஒருவன் விருந்தினர்க்குச் செய்யும் உதவியின் அளவைப் பொறுத்து அவனுக்கு நன்மை ஏற்படுவதில்லை. விருந்தினரின் தன்மையைப் பொறுத்தே செய்தவனுக்கு நன்மை ஏற்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். இதனை ‘உதவி வரைத்தன்று உதவி, உதவி, செயப் பட்டார்சால்பின் வரைத்து’ என்னும் குறளாலும் உணர லாம்.கறந்த பாலில் ஒரு சிறு கரண்டிச் சர்க்கரை யிடு வோம்; அடுத்தபடியாக (கசப்புள்ள மருந்துக் கியாழத்தைச் சொல்லவில்லை) முன்று மடங்கு நீர் கலந்த பாலில் மூன்று சிறு கரண்டிச் சர்க்கரையை யிடுவோம். நமக்கு இனிப்பது முன்னதா? பின்னதா? பின்னதைவிட முன்னது இனிப்ப தற்குக் காரணம் சர்க்கரையின் அளவா? இல்லையே! பாலின் தன்மையேயன்றோ? இன்னும் மருந்துக்கியாழத்தில் (கஷாயத்தில்) இட்ட சர்க்கரையின் நிலை என்ன? உதவியும் இதுபோலத்தான்! எனவே, இல்லாத ஏழைக் குடும்பத்தாருங்கூட, தக்கோர்க்குத் தம்மால் இயன்ற அளவு சிறிதாயினும் உதவின் அதுவேபோதும்.