17
அப்படியானால், கண்னோட்டமில்லாக் கண்கள் எத்தகையன? அதையும் சொல்லுகிறார். அது கண்களல்ல, புண்கள் என்று. கண் அறியும், புண் அறியாது. ஆதலின், கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் என்கிறார்; என்ன உள்ளம் பாருங்கள்!
இரக்க உள்ளம்
“அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று.”
என்பது ஒரு குறள்.
பண்டைக் காலத்திலே ஆரியர்களுக்கும், தமிழர்களுக்கும் அடிக்கடி சண்டை நேருவதற்குக் காரணமாக இருந்தது யாகங்களே! உயிர்ப்பலி கொடுத்து யாகம் செய்தல் ஆரியர்க்குரிய பழக்கம். அது தவறு என்பது தமிழர் வழக்கம். தமிழ் நாட்டில் தமிழர்கள் உயிர்ப் பலி கூடாது என்றே அன்று தொட்டு இன்றுவரை வாதாடி வருகின்றனர். அறவொழுக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். ஆகவே, தமிழர் நாட்டில் ஆரியர் வந்து உயிர்ப் பலி கொடுப்பது, தமிழரின் பழக்க வழக்கம், ஒழுக்கம், நெறி, மொழி, நாடு இவற்றிற்குக் கேடுசூழச் செய்யும் செய்கையென்று கருதினார்கள். ஆகவே தமிழ் மன்னர்கள் பலரும் வட ஆரியர்கள் இங்கு யாகம் செய்யக் கூடாது என்று கட்டளையிட்டனர். ஆனால் ஆரியர்கள் மறைமுகமாக யாகம் செய்யத் தொடங்கினர். தமிழ் மன்னர்கள் அவற்றை அழித்தனர். பலசாலிகளான தமிழ் மன்னர்களை ஆரியர்கள் அரக்கர்கள் எனக் கூறினர். பின்னால் இதுவே தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் சண்டை எனப் புராணக்கதையாகக் கிளம்பியது போலும். வள்ளுவர் சிறந்த தமிழ் மகன் ஆதலின், அவர் உள்ளம்
வ,-2