பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

யாகத்தை வெறுத்தது. அவி சொரிந்து, நீ 1000 யாகம் செய்வதைவிட, ஒரு உயிரைக் கொலை செய்யாமலிருப்பது நல்லது எனக் கூறினார் வள்ளுவர். இதனால் நெய், பால், பழம் முதலிய அவிகளைப் பெய்து பல யாகங்களைச் செய்து பெறக்கூடிய பலன்களைவிட, கொல்லா நோன்பு நோற்பவர்கள் அதிகப் பலன்களைப் பெறுகிறார்கள் என்பது கருத்து: கொல்லாமை மட்டுமல்ல; உண்ணாமையும் வேண்டும் என்று கருதுகிறது வள்ளுவரின் இரக்க உள்ளம்.

அரச உள்ளம்

திருவள்ளுவர் திடீரென்று அரசாகிவிட்டார்; அரச உள்ளம் ஆட்சி செய்யத் தொடங்குகிறது. பாருங்கள்.

'வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி'

என்பது ஒரு குறள், இக் குறளில் மக்கள் மழையை எதிர்பார்த்து வானோக்கி வாழ்வது மட்டுமல்லாமல், அவ்வாறு மேல்நோக்கும் போது அரசன் (செங்) கோல் நோக்கியும் வாழ்கின்றார்கள் என்று கூறுகிறார்; அதாவது நாட்டிலே மழைவளம் மட்டுமிருந்தால் போதாது; நல்ல அரசும் அமைய வேண்டும். அப்போதுதான் மக்கள் நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது கருத்து. சற்று முன்னே, கொலையை வெறுத்து, கொல்லாமை விரதம் பூண வேண்டிய அவசியத்தை வற்புறுத்திய வள்ளுவர், அரசரான உடன்,

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்”

எனக் கூறி, கொலையில் கொடியவர்களைக் கொல்லுதல் அரசனது கடமையென்று வரையறுக்கிறார். இங்குக் கொலையினை வள்ளுவர் உவமையுங்கூறி ஆதரிக்கிறார். ஏன்? ஓர் நெல் வயலைக் காட்டி, அங்கே பயிரிடையே களை