20
இரப்பது ஒரு இழிவு, அது இழிந்து இரப்பவனிடம், "இல்லை" யென்று கூறிக் கையை விரிப்பது அதைவிட இழிவு வைத்துக் கொண்டே இல்லை எனக் கூறுவது எல்லாவற்றிலும் இழிவு. இத்தகைய இழிந்த மக்களிடம் போய் இரப்பது இழிதொழிலுக்கும் ஒரு இழிவாகும், என்பது வள்ளுவரின் கருத்து.
அந்தப் பிச்சைக்கார மகாநாட்டில், ஒரு பிரதிநிதி எழுந்து, "எத்தனையோ தொழில்கள் இருக்க நாம் ஏன் இழிதொழில் செய்யவேண்டும்?" எனக் கேட்டார், மற்றொரு பிரதிநிதி எழுந்து, 'அது நம் தலைவிதி; பிறப்பிக்கும் பொழுதே பிரமன் நம் தலையில் அவ்வாறு எழுதி விட்டான்' என்றார். வள்ளுவர், உள்ளம் துடிதுடித்து விட்டது.
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகஇயற்றி யான்."
எனக் கூறிவிட்டார். ஒருவனைப் பிச்சை எடுத்தே உயிர் வாழவேண்டும் என்று எண்ணிப் படைத்திருப்பானானால். இந்த உலகத்தைப் படைத்த அவன் பரந்து கெட வேண்டும் எனச் சினந்து கூறுகிறார். அவ்வாறு பிரகன் எவரையும் படைப்பதில்லை என்பதே வள்ளுவரின் கருத்து. அப்படியிருக்குமானால், அவன் அழித்தொழிய வேண்டும் எனபதே குறளின் கருத்து. அவ்வளவு கொடுமையையும் வேதனையும் தரவல்லது பிச்சை எடுக்கும் தொழில் என்று வள்ளுவர் உள்ளம் கருதுகிறது. இதிலே ஒரு நயமும் உண்டு. வள்ளுவர் உலகியற்றியானைப் 'பரந்து கெடுக' என்று கூறுவது ஏன் தெரியுதா? பிச்சைக்காரன் பிச்சைக்காகப் பரந்து திரிந்து அலைந்து கெடுகிறானல்லவா. அதுபோலவே, அவனைப் படைத்தவனும் பரந்து திரிந்து, துன்பத்தை அனுபவித்துக் கெடவேண்டும் என்று சாபம்