28
வியப்பு உள்ளம்
ஒரு செப்படி வித்தையைப் பற்றிச் சொல்லுகிறார் வள்ளுவர். சுரை போட்டால் சுரை முளைக்கும். அவரை விதைத்தால் அவரை முளைக்கும். துவரை விதைத்தால் துவரை விளையும். தினை போட்டால் தினைதான் விளையும் அல்லவா? ஆனால் நட்பை விதைத்தால்தான் பகை விளையும் என்பதை வள்ளுவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பகைக்கு விதை பகை அல்ல; நட்பு என்பது வள்ளுவர் முடிவு. உங்கள் பகைவரை நினைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு நண்பர்களாயிருந் தவர்கள் அல்லவா? அவர்களை நண்பர்களாகக் கொள்ளாமல் மற்றவர்களைப் போலச் சாதாரணமாகக் கருதி இருந்திருந்தால், பகைவராக மாறியிருப்பார்களா? ஆகவே தான் திருவள்ளுவர் சிநேகம் என்னும் விதை போட்டால் தான் பகைமை என்னும் செடி முளைக்கும் என்பதை ஆய்ந்தாய்ந்து கண்டு,
"ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்"
என முடிவுகட்டிக் கூறிவிட்டார்.
கேடு உள்ளம்
ஒருவன் கெட்டுப்போகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை எல்லோரும் கைவிட்டு விலகுகிறார்கள். அவ்விலகும் கூட்டத்திலே ஒருவருடைய உள்ளத்தைப் பற்றிக் கூறுகிறார். அவன் இறக்கும்போது அவனுடைய மனச் சாட்சியே கொல்லுமாம். தன் நண்பனைக் கேடுவந்த காலத்தில் கைவிட்டதற்காக வருந்தி நைந்து போவானாம். கைவிட்டு ஓடிய நண்பன் மட்டுமல்ல, கைவிடப்பட்ட