29
நண்பனும் இறக்கும் தருவாயில் தனது நண்பர்களைப்பற்றி நினைத்தாலும் உள்ளத்தில் தீப்பற்றி எரிவது போலிருக்குமாம். இதனையே வள்ளுவர்,
"கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்."
என்று கூறுகிறார். கெட்டுப் போவதாலும் ஒரு நன்மை உறுதியாக உண்டு என்கிறார் வள்ளுவர்.
"கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்."
என்பது ஒரு குறள். ஒருவனுக்குக் கேடுவந்த காலந்தான் நல்லறிவு பெறுகின்ற காலம் என்கிறார். அப்போதுதான் சுற்றத்தார் நண்பர் பலரில் உண்மையானவர் யார் என அறிந்து கொள்ளலாம் என்கிறார். சுற்றத்தாரின் குண நலன்களை ஆராயக் கேடுகோவம்தான் அளவு கோலாக அமையுமாம். நற்காலத்தில் நண்பர்களை அளக்க அளவு கோல் இல்லையென்று கூறுகிறது. வள்ளுவர் உள்ளம்.
ஆராய்ச்சி உள்ளம்
தற்காலத்தில் எங்கும் ஆராய்ச்சியைப் பற்றியே பேசுகின்றனர். எழுதுகின்றனர். இது ஆராய்ச்சிக் காலம். நீங்களும் இப்பொழுது கொஞ்சம் ஆராய வேண்டும் என்பதற்காக ஒன்றிரண்டைக் குறிப்பிடுகிறேன். ஐம்புலன்களாலும் நாம் இன்பத்தை அனுபவிக்கிறோம் என்பது யாவரும் அறிந்ததே. வேறு வேறு காலங்களில் வேறு வேறு பொருள்கள் ஐம்புலன்களில் சிலவற்றிற்கு மட்டும் இன்பத்தைத் தருவது நாம் அறிந்ததே, ஆனால் ஐம்புலன்களையும் ஒரே சமயத்தில் இன்பத்திலாழ்த்தும் ஒரு பொருள் என்ன என்று அறிவது தான் ஆராய்ச்சியின் பாற்பட்டது. மேல்நாட்டார் கூட இன்னும் இம்மாதிரி ஒரு பொருளைக்