32
காதல் உள்ளம்
"உடம்பொடு உயிரிடை யென்ன மற்றன்ன
மடங்தையொடு எம்மிடை நட்பு"
என்கிறார். இக்குறளில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே வளரும் நட்பு, உடம்புக்கும் உயிருக்கும் தொடர்பு போன்றது என்று வள்ளுவர் தம் உள்ளத்தைக் காதல் உள்ளத்தில் குழைத்துக் கொடுப்பது போன்று கூறுவதைக் கண்டு மகிழலாம். யாக்கை நிலையாமையைக் கூறவந்த போதுங்கூட நட்பை அவரால் மறக்க முடிய வில்லை.
"குடம்பை தனித்தொழியப் புட்பறங் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு"
என்கிறார். முட்டையை விட்டுப் பறவை பிரிவதைப் போலவோ கூண்டைவிட்டுக் குருவி பிரிவதைப் போலவோ உடம்பைவிட்டு ஒரு நாளைக்கு உயிரும் பிரிந்துவிடும் என்பதே குறளின் கருத்து, "உடம்போடு உயிரிடை தொடர்பு" எனக் கூறாமல், 'நட்பு' எனக் கூறியது ஆழ்ந்த பொருள் உடையதாகும். ஆம்! உடல் துடித்தால் உயிரும் துடிக்கிறது. உயிர் வருந்தினால் உடம்பு வருந்தி இளைக்கிறது. உடல் துண்டானால் உயிர் போய்விடுகிறது. உயிர் பிரிந்து போனால் உடலும் அழுகிச் செத்த உடலும் செத்துப்போகிறது. எவ்வளவு அருமையான உவமை! சாதலுக்கு இதைவிட வேறு உவமை கூறுவதற்கில்லை.
மக்கள் உள்ளம்
"மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம் கண்டதில்"
என்பது ஒரு குறள். அதாவது கயவர்கள், உருவத்தில் மக்களைப்போலவே இருப்பார்கள். ஆனால் மக்களல்ல