34
னேன்' என்றான். ஆனால் தலைவி, ஒருபோது மறந்து, பின் நினைந்ததாகக் கருதிக்கொண்டு. இடையிலே ஏன் மறந்தீர்?" என்று கேட்டு, அழ ஆரம்பித்து வருந்தினாளாம். இச்செய்தியை,
"உள்ளினேன் என்றேன் மற்றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்"
என்ற குறளில் கூறுகிறார். இவ்வாறு தலைமகள் - தலைமகனிடம் எவ்வளவு மிகுதியாக அன்பு வைத்திருந்தாள் என்பதைப் பெண்மையுள்ளமாக வடித்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.
முடிவு
நாம் தமிழர்கள், நம் நாடு தமிழ்நாடு, நமது மொழி தமிழ்மொழி என்பதையும்; திருக்குறள் கற்பதால் நம்நாடு, மொழி, கலை, பண்பு, நாகரிகம் இவற்றை நன்கு அறிய முடியுமென்ற எண்ணத்தையும் மனத்திலிருத்துங்கள். பிற நாட்டார் தமிழ் நாடு என்று ஒன்று இருப்பதாக நினைப்பதற்குத் துணையாக இருப்பது திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்று தான், ஆகவேதான் பாரதியாரும்,
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வாள்புகழ் கொண்ட தமிழ் நாடு"
என்று பெருமிதத்துடன் பாடினார். எல்லா நாட்டினராலும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ள உயர்ந்த நூல்களில், பைபிள் முதலாவதாகவும், குரான் இரண்டாவதாகவும், திருக்குறள் மூன்றாவதாகவும் மொழி பெயர்க்கப் பெற்றிருக்கிறது. ஆகவே, இத்தகைய சிறப்புப் பொருந்திய திருக்குறளைப் படிக்காமலும், அறியாமலும் ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருப்பானேயானால்! அவன் தமிழனாகவே இருக்கமுடியுமா? ஆகவே அன்பர்களே! திருக்-